உலக
குரு வள்ளலார்
குரு
பூஜை கொண்டாடு !
உலக குரு
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் சுபானுவருடம் புரட்டாசி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று
ஞாயிற்றுக்கிழமை (05-10-1823) பிறந்தார் ! உலகுக்கு வழி காட்ட ! ஒளி நெறி ஊட்ட ! நம்மை
கடைத்தேற்றுவதற்கு !?
இதுவரை இவ்வுலகில் எண்ணில்லா ஞானிகள் மகான்கள் சித்தர்கள் ரிஷிகள் யோகிகள் தவசீலர்கள் தோன்றி உலகருக்கு ஞான வழி
காட்டியுள்ளனர் ! எந்த நாட்டில் தோன்றிய யாராயினும் மனிதகுலம் உய்ய அன்பு ஒன்றை
தவிர வேறு எதுவும் கூறவில்லையே !?
வாழையடி வாழையென வந்த அத்திருக்கூட்ட மரபில் வந்துதித்த ஞானி நம் வள்ளல்
பெருமான் !வள்ளலாரிடம் உள்ள சிறப்பு யாதெனில் , இதுவரை இரகசியகமாக இருந்த ஞானத்தை , பலரும் பரிபாஷையாக மறைத்து சொல்லியதை எல்லோருக்கும்
சொன்னார் வள்ளலார் !
உலக மக்கள் மரணமிலா பெருவாழ்வு பெற கூவி அழைத்து "வள்ளலாரே உலக குரு
!"
உண்மை உணர்ந்து வள்ளலாரை நம் குறுவென ஏற்று , அவர் அவதார தினத்தை குருபூஜையாக உலகெங்கும் கொண்டாடுவோம் !
மாதா பிதா பெற்ற நீவீர் குருவாக வள்ளலாரை கொண்டாடுக ! குருபூஜைசெய் !
குருவை போற்று ! ஞானம் கிட்டும்!!
மறவாதீர் ! புரட்டாசி மாதம் சித்திரை நட்சத்தரத்தன்று குருபூஜை !! உலக குருவின் ஜெயந்தி
!!
வள்ளல் பெருமானின் அருளிச் செயல்கள்
1. பாடல்கள் : திருஅருட்பா - ஆறு
திருமுறைகள்
2. பாடல்கள் : ஆறுதிருமுறைகளிலும்
சேராதது
3. விண்ணப்பங்கள் : இறைவனிடத்துச் செய்து கொண்டவை (உரைநடை )
4. கடிதங்கள் : தம் கைப்பட எழுதியவை
5. கட்டளைகள் : தாம் நிறுவிய நிலையங்களின்
நடைமுறைகள் பற்றி எழுதியவை
6. பத்திரிக்கைகள் : சுற்றறிக்கைகளும் , அழைப்பிதழ்களும்
7. உபதேசங்கள் : கூட இருந்தவர்களும் , கேட்டவர்களாலும் எழுதி வைக்கப்பட்டுள்ள குறிப்புகள்
8. உரைநடைநூல்கள் : 1. மனமுறை கண்ட வாசகம்
2. ஜீவகாருண்ய ஒழுக்கம்
9. உரைகள் : 1. தமிழ் என்ற சொல்லுக்கு எழுதிய உரை
2. பெரியபுராணம் முதல் பாடல் முதல் சொல் 'உலகெலாம் ' என்பதற்கு
வரைந்த விளக்கம்
3. ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி
4. தொண்ட மண்டல சதகத்தின் நூற்பெயர் இலக்கணமும் கடவுள்
வாழ்த்து
பாடலுக்கு செய்த உறையும்
5. பொன்வண்ணத் தந்தாதியின் 22-ஆம் பாடலுக்கு செய்த உரை
6. வேதாந்த தேசிகரின் குறட்பா ஒன்றுக்கு வரைந்த உரை
10. பதிப்பித்த நூற்கள் : 1. ஒழிவிலொடுக்கம் - 1851
2. தொண்ட மண்டல சதகம் - 1855
3. சின்மய தீபிகை - 1857
11. பிற : பிறரது
நூல்களுக்கும் பதிப்புகளுக்கும் வழங்கிய சாற்றுக்கவிகள் மருந்துச் சரக்குகளின் குண அட்டவணை
வள்ளல் பெருமானின் தனிப்பெரும் அருட்பணிகள்
1. சமுதாயத்திலும் மதத்திலும் வேறூன்றிவிட்ட கண்மூடிப்
பழக்கமெல்லாம் மண்மூடிப்போக அரும்பாடு பட்டார்கள் .
2. முதல்முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தினார்கள் .
3. முதன்முதலில் முதியோர் கல்வியை ஏற்படுத்தினார்கள் .
4. முதன்முதலில் தமிழ் ஆங்கிலம் இந்தி என மும்மொழி பாட சாலையை
உருவாக்கினார்கள் .
5. தமது கொள்கைக்கென்று தனி ஒரு மார்க்கம் கண்டார் . "
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ".
6. தமது மார்கத்திற்க்கென்று தனிக்கொடி கண்டார் . "
சன்மார்க்க கொடி " மேல் ஒருபகுதி மஞ்சள் கீழ் இப்பகுதி வெள்ளை .
7. தமிழ்நாட்டின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் .
8. எவ்விதபேதமுமின்றி அனைவருக்கும் அன்னதானம் வழங்கிட
"சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை " ஏற்படுத்தினார் .
9. சடங்குகள் ஏதுமின்றி இறைவனை ஜோதி வடிவில் வழிபட சமரச சுத்த
சன்மார்க்க சத்திய ஞானசபை
நிறுவினார் .
10. வள்ளலார் கண்ட ஆன்மநேய ஒருமைப்பாட்டு நெறிக்கு மேல் ஒரு
நெறி இல்லை .
11. " அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி"
என்று
வள்ளல்பெருமானார் அருளிய மகாமந்திரத்திற்கு மேலான மந்திரம் ஒன்றும் இல்லை .
12. சன்மார்க்க நெறியை உரைத்ததோடு அல்லாமல் அதன்படி
வாழ்ந்துகாட்டினார்கள் . அதன் பயனாக
அருட்பெருஞ்ஜோதி ஆனவர் நம் வள்ளல் பெருமான் ஆவார் .
No comments:
Post a Comment