அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !
மிருகங்களும், பறவைகளும் மற்ற உயிர்களும் செய்யும் முறையீடும், விண்ணப்பமும்.
எல்லா உயிர்களுக்கும் பொதுக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை
நீதிக்கடவுளே!
தேவரீர் பெருங்கருணையினால் விசேட அறிவு கொடுக்கப்பட்ட மனிதர்கள்
எங்களுக்குச் செய்யும்
கொடுமைகளை சொல்லி முடியாது. உணவிற்காக தினசரி கோடிக்கணக்கில் எங்களை
பதறப்பதற,துள்ளத்துள்ள, வெட்டி, அறுத்து, நசுக்கி இரக்கமில்லாமல்
கொள்ளுகிறார்கள். முன் ஜென்மத்தில் ஏற்கனவே
நாங்கள் உயிரைக் கொன்று இரக்கமில்லாமல் வாழ்ந்ததால் தான் இப்போது மனித
உடம்பிலிருந்து விடுபட்டு துன்பபட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்கள்
இப்போது அடைந்து கொண்டிருக்கின்ற
துன்பங்களை எங்களால் தாங்க முடியவில்லை. அவர்கள் எவ்வளவு எங்களுக்கு
செய்தாலும் அவர்கள்
எங்கள் ஆன்ம இனங்கள் என்ற உணர்வு வந்துவிடுகிறது.
எங்களுக்குச் செய்யும்
கொடுமையால் அவர்கள் கொடுமை, வறுமை,பிணி,துன்பம், கவலை , பூமி நடுக்கம்,
பெரும்புயல், யுத்தம்,
விஷசுரம்,பேரிடி, தீடீர் சாவு, திருட்டு, கொள்ளை, கொலை முதலியவைகளால்
துன்பப்பட்டு இறக்கின்றனர். அவர்களுக்கு இரக்க
சிந்தனை உண்டு பண்ணி அவர்களையும் எங்களையும் காத்தருள வேண்டும். தனக்கோ
தன்பிள்ளைக்கோ
தன் மனைவிக்கோ சுற்றத்திற்கோ ஆபத்து வரும்போது கவலைப்பட்டு கண்ணீர்
விட்டுக்கதறும் மனிதர்கள் எங்களை ஏன் இரக்கமில்லாமல் கொல்லுகிறார்கள்?
அவர்களுக்கு நாங்கள் என்ன கெடுதல்
செய்தோம்? இது தான் மனித நீதியா? உங்களைப் படைத்த கடவுள் தானே எங்களையும் படைத்தார்!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டுமென்று ஒருமை நடம்புரியும் ஒரே கடவுளே! ஒளியே!
எங்களுக்கு விசேட அறிவு இல்லாததால், எங்களுக்கு தேவரீரை வணங்க முடியவில்லை.
நினைக்க முடியவில்லை. பக்தி செய்ய முடியவில்லை. தொண்டு செய்ய
முடியவில்லை. ஆகவே எங்களையும்
மனித உடம்பில் வரவழைத்து தேவரீர் திருவடியை அடைய அருள் செயல் வேண்டும்.
மேலும் மனிதர்கள் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்து அவர்களுக்கு உண்மை
அறிவு, உண்மை இரக்கம், உண்மை அன்பு முதலிய நற்குணங்களை அளித்து இவ்வுலகையும் மற்ற உலகங்களையும் அறிவு உலகமாக,
அருள் உலகமாக, ஆனந்த உலகமாக மாற்றும்படி மிகவும் மன்றாடி கேட்டு கொள்கிறோம்.
குற்றமெல்லாம் குணமாகக் கொள்ளும் குணப்பெருங்குன்றே! எவ்வுயிர்க்கும் தாயே!
எங்கள் சார்பில் எங்களுக்காக மனிதர்களிடம் வாதாடுகின்றவர்களுக்கும் தேவரீரிடத்தில் விண்ணப்பித்துக்
கொள்பவருக்கும், கொல்லா விரதத்தை பரப்புகின்றவர்களுக்கும், எக்காலத்தும் எல்லா நன்மைகளும் பெறச்
செய்து மரணமிலாப் பெருவாழ்வில் அவர்களை வாழவைக்க வேண்டுகிறோம். மற்றவர்களையும் கொல்லா
விரதத்தை எடுக்க செய்து அவர்களையும் மரணத்திலிருந்து விடுவிக்க வேண்டும். சிற்றறிவால் செய்து
கொள்ளும் இச்சிறு விண்ணப்பத்தை திருச்செவிக்கு ஏற்பித்தருளல் வேண்டும்.
தேவரீர் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!
இங்ஙனம் தங்கள் அருமைப் பிள்ளைகளாகிய,
மாடு ஆடு கோழி பன்றி மீன் மற்ற உயிர்வகைகள்
ஊன் உணவை விட்டாலன்றி இன்று பெருகி வரும் எந்த நோயையும் தீர்க்க முடியாது.
இது சத்தியம்! சத்தியம்!
ஒவ்வொரு மனிதனின் முதல் வேலை தான் என்று தெரிந்து கொள்ளவேண்டியது. தான் என்பது உயிர். உயிரே இந்த உடம்பிற்கு ஆதாரம். அது இன்றி உடலில் ஒன்றும் நடப்பது இல்லை. அந்த மாபெரும் சக்தியை மறந்து/கவனிக்காமல் விட்டு வாழ்வில் பல துன்பங்களுக்கு ஆள் ஆகிறோம். அந்த உயிர் ஒளியை எப்படி தெரிந்து கொள்வது? நமக்கு இருக்கும் அறிவால் நம் உயிரை காண இயலாது. அதனால் குருவை சரணடைந்து திருவடி தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள். உங்கள் தவ ஆற்றலால் உங்கள் உயிரை தெரிந்து கொள்ளுங்கள். உயிரை கண்ட பிறகே மனிதன்.
Thursday, 11 April 2013
சாகா நிலையே ஞானம்
பிறந்த நாம் ஞானமும் கல்வியும் அறிதல் அரிதினும் அரிதாம்! இந்த
ஞானமும் கல்வியுமே சாகக்கல்வி! சாகா நிலையே ஞானம் பெற்றவர்
பெறுவது.அதை அறியும் கல்வியே சாகாகல்வி.
சாகா நிலை மட்டும் அறிந்தால் மட்டும் போதுமா? "ஞானமும் கல்வியும் நயந்தகலையும் தானமும் தவமும் தான் செய்தல் அரிதே" ஆக நல்ல படியாக மனிதராய் பிறந்து சாகாக்கல்வி கற்ற நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் தானம் தவம் செய்தலே.
இந்த உலகில் யாராக இருந்தாலும் சரி தவம் செய்யமால் ஞானம் இல்லை.
தானம் செய்யாமல் ஞானம் கிட்டது ! சத்தியம் ! தவம் செய்பவருக்கு
உண்டான தகுதி தானம் செய்பவராக இருக்க வேண்டும் ! என்பதே!
தானம் கொடுக்க வேண்டும், நாம் வள்ளலாக வேண்டும். தானம் பலவகை!
எல்லாவற்றையும் தானமாக கொடுக்கலாம். தமிழ் கூறும் நல்லுகத்தில் வள்ளல் பலரை நாம் கற்று அறிந்து இருக்கிறோம். ஆன்ம நேய ஒருமைபாட்டிற்க்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்கள் அந்த வள்ளல் பெருமக்கள்.
புறாவுக்கு சதை கொடுத்த சிபி சக்கரவர்த்தி.
முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த பாரி.
மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன்.
வாடிய பயிரை கண்ட போது வாடினர்! வள்ளல் இராமலிங்க சுவாமிகள்.
இப்படி எல்லா ஜீவிகளுக்கும் இறங்கிய கருணை உள்ளமே இறைவன்
வாழும் ஆலயம்.
எதை எல்லாம் தானம் கொடுத்தார்கள்! எப்படி கருணை கடலாக
வாழ்ந்தார்கள்! கர்ணன் வள்ளலுக்கு எல்லாம் வள்ளல்! கர்ணன்
கொடைக்கு ஈடு இணையே கிடையாது. இவர்கள் போலே இல்லா
விட்டாலும் கொடுத்து மகிழும் நல்ல உள்ளதை நாம் பெற்றாக
வேண்டும்.
இரக்கமே எனது உயிர் என்றாரே இராமலிங்க வள்ளலார்! எல்லோரும்
பொருளை தானமாக கொடுத்தார்கள்.ஆனால் வள்ளலாரோ,
எல்லா உயிரும் உயவடையும் வழியை காட்டி,மனிதன் தன்னை உணர
வழி காட்டி அருளினார்.
ஞான தானம் செய்து ஆன்மீக புரட்சியை தொடங்கி வைத்தார்கள்.
இதுவரை இரகசியமாய் இருந்த ஞான பாதை வள்ளல் அருளால் பரசியமகியது! வெட்ட வெளிச்சம் ஆகியது.
ஞானம் எல்லாரும் பெறலாம். மனித பிறவியே இதற்க்கு தகுதி .
வேறொன்றும் தேவை இல்லை! என அறைகூவல் கொடுத்து
வம்மின் உலகியலிர் மரண மில பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்.
வாரீர்! வாரீர்! என்று கூவி அழைத்து போதித்தார் ஞானத்தை.
இரகசியங்களை உடைத்தார்.
இன்று அடியேனை ஆட்கொண்டு ரகசியங்களை வெளிப்படுத்தி மெய்ஞான
விளக்கங்களை எல்லோரும் அறிய நூற்களாக எழுதி வெளியிடவும்
அருள் புரிந்து உள்ளார்கள். என்குரு வடலூர் வள்ளல் இராமலிங்கர்
அருளாசியில் அடியேன் ஞான தானம் செய்து வருகிறேன்.
எல்லாருக்கும் ஞான தானம் செய்யுங்கள் உங்களுக்கும் ஞானம் கிட்டும்.
"ஊரன் பிள்ளை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும்."
ஊரார் ஞானம் பெற நீங்கள் வழி காட்டினால் இறைவன் பரிவு கொண்டு
விரைந்து உங்களை ஆட்கொள்வர்.
இதுவரை "மறை"யாக இருந்த ஞானம் வள்ளலாரால் "திரை" நீக்கப்பட்டு
"உரை"யாக நமக்கு கிட்டியது. என்னே! அவர் தம் கருணை.
சாகாக்கல்வி - சற்குரு சிவசெல்வராஜ்.
பக்கம் - 50
ஆதிகுரு உணர்த்திய ஞான ரகசியம்
அரிது - விவேகானந்தர்.
சனகாதிகளின் தவிப்பை உணர்ந்த சர்வேஸ்வரன் அருள் புரிய திருஉளம்
கொண்டார்!சனகாதி முனிவர்கள் முன் தோன்றினார்! திடீர் என்று தன்
முன் ஒரு உருவம் தோன்றியதை கண்டு திகைத்து நின்றனர்!
பரம் பொருளை - காண விரும்பினோம் இப்படி ஒரு உருவம்
நம் முன் நிற்கிறதே ! ஏன் ? யார்? எதற்கு? என ஆச்சர்யத்துடன் தனக்குள்
வினவிகொண்டனர். கல்வி கேள்விகளில் கற்று தேர்ந்த சனகாதிகள்
ஒருவாறு யூகித்து அறிந்தனர்! நாம் கடவுளை காண விரும்பினோம்
தீடீர் என்று தோன்றிய இவ்வுருவம் ஒன்றும் கூறாமல் நம்முன் இருகிறதே!
கடவுளை காண அந்த கடவுளே நமக்கு வழி காட்டத்தான் என யூகித்து அறிந்தனர்.
கடவுளை! எல்லாம் கடந்தவனை அவ்வளவு எளிதாக காண முடியுமா என்ன?
நாம் அதற்க்கு பக்குவமாக இருக்க வேண்டாமா? சனகாதிகளுக்கே
இறைவன் நேரில் அருள் புரியவில்லை!?
சர்வமும் அறிந்த சனகாதி முனிவர்களுக்கு, அதன் மூலம் உலகுக்கே,
இறைவன் முதன்முதலாய் குருவாக வந்து காட்சி கொடுத்து மோன
உபதேசம் அருளினான்!
தன்னை அடைய குரு உபதேசம் பெறவேண்டியதன் முக்கியத்துவத்தை
தானே முதல் குருவாய் அமர்ந்து காட்டினார். ஆதி குருவனே இறைவனே
சனகாதி முனிவர்களுக்காக தட்சினாமூர்த்தியாக காட்சி கொடுத்தார்!
அதன் மூலம் மீட்சி பெற வழிகாட்டினார்.
தங்கள் முன் பேசாமல் பாதி கண் திறந்த நிலையில், இடக்காலை மடக்கி,
வலக்காலை ஊன்றி அசுரனை மிதித்த நிலையில் கல்லால் மரத்தின் கீழ்
அமர்ந்திருக்கும் பகவானை கண்டனர். ஒரு கையில் தீயும் ஒரு கையில்
உடுக்கையும் ஒரு கையில் வேதமும் ஒரு கை சின்முத்திரையுடன்
அருளும் நிலையும் இருக்க கண்டனர். நாற்கரமும் கண்டனர்.
சடா மகுட சிரசின் வலப்பக்கம் சூரியன் இடப்பக்கம் சந்திர பிறையுடன்,
சாந்தம் தவழும் அழகியமுகமும் கண்டனர்.vயோசித்தனர்! யூகித்தனர்! ஒருவாறு உண்மையை உணர்ந்து கொண்டனர் !
அது என்ன?
ஆதி குருவாகிய இறைவனே தட்சினாமூர்த்தியாக தங்கள் முன்
தோன்றியுள்ளது! தென் திசையான எமனிடமிருந்து மீள, மரணமில்ல
பெருவாழ்வு பெற தென் திசை நோக்கி இருக்கும் ஆதிகுரு
தட்சினாமூர்த்தியை வடக்கு நோக்கி அமரவேண்டும். தட்சின பாகத்தை
தென்திசை நோக்கி அமர்ந்த மூர்த்தம் ஆனதால் தட்சினாமூர்த்தி என்றனர்
சனகாதிகள்.
ஆதிகுரு ஒன்றும் பேசாமல் இருப்பதால் நாமும் ஒன்றும் பேசாமல்
மௌனமாக இருக்கவேண்டும் என்று உணர்ந்தனர். இதுவே மோன நிலை.
இறைவன், தான் தீயைய் சுமந்து தான் தீயாக அக்னியாக ஜோதி
ஸ்வருபமாக இருப்பதை உணர்த்துகிறார்! அது மட்டுமல்ல ஒளியான
அவனோடு உடுக்கை ஒலி ஓங்காரம் நாதமும் இருப்பதாகவும் உணர்த்துகிறார்! அதாவது ஒளியும் ஒலியும் விந்து நாதமாக இருப்பவன்.
மற்றொரு கையில் இருக்கும் வேதங்கள் சொல்வது இதைத்தான்!
தட்சினாமூர்த்தியான இறைவனை பற்றியும், அவனை அடைய வழியுமே!
நான்காவது கை அருள்பொழியும் சின்முத்திரை தாங்கிய கை!
ஒளிசேர்ந்த ஒலியாய் பரம்பொருள் சின்முத்திரையில் உள்ளார்.
சின்முத்திரை உணர்ந்து தவம் செய்க!
கண் திறந்து பேசாது "சும்மா இரு" என்பதுவே ஆதிகுரு
தட்சினாமூர்த்தி சொல்லாமல் உணர்த்திய ஞான ரகசியம்.
இறைவன் நேரடியாக அருளவில்லை. குருவாக உபதேசித்து அருளினார்.
தன்னை அடைய குரு மிக மிக மிக அவசியம் என்பதை உணர்த்தி "சும்மா
இரு " என்பதை உபதேசிக்கிறார். சும்மா இருந்து விழித்திருந்து தவம் செய்து
பக்குவம் பெற்றவர்க்கே இறைவன் தன்னை காட்டியும் உணர்த்தியும்
அரவணைத்தும் ஆட்கொள்கிறார். இதுவே ஞான நிலை! மோன நிலை!
திருப்புகழில் அருணகிரிநாதர் "சும்மா இரு சொல்லற" என
முருக பெருமான் தனக்கு குருவாய் வந்து அருளிய திறத்தை
வியந்து கூறுகிறார்.
ஆதிகுரு தட்சினாமூர்த்தியே! அது சாட்சாத் இறைவனே !
சும்மா இரு! விழித்திரு! இதுவே அவர் உபதேசம் இதுவே ஞானம்!
சாகாக்கல்வி கல்வி புத்தகத்தை முழுமையாக படியுங்கள் பயன்பெறுங்கள்!
புத்தகத்தை படிக்க
Wednesday, 10 April 2013
வள்ளல் பெருமான் அருட்செயலே!!
குரு, குரு ஆனது எப்படி ?
அறிந்தனம் ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
செவ்வண்ணம் பழுத்ததனித் திரு உருக்கண் டெவர்க்கும்
தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர்அறியத் தெருவில்
இழுத்து விடுத் ததுகடவுள் இயற்கை அருட் செயலோ
மவ்வண்ணப் பெருமாயை தன் செயலோ அறியேன்
மனம் ஆலை பாய்வது கண் மன்றில் நடத் தரசே.
ஞானம் தெரிந்தவர் கூட முழுமையாக வில்லை! உணர்ந்தாரில்லை!
ஆனால் அடியேன் குருவருளால் திருவடிஞானம் அறிந்து உணர்ந்தேன்!
ஞானம் அனுபவம் பெற்றேன். யாருக்கும் தெரியாமால் சிவனே என்று
நாம் இருப்போமே என்றிருந்தேன்! ஆனால் எல்லோரும் அறிய ஞானம்
அறிந்தவன் இவன் என என்னை தெருவில் இழுத்து விட்டுவிட்டனர்.
இது இறைவன் அருட்செயலோ அல்லது மாயை விளையாடுகிறதோ அறியேன்! என்மனம் அலைபாய்கிறது என்கண்மணி நடராசா அருள்புரிவாயாக!
திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தன் அனுபவத்தை இப்பாமாலையில் உரைத்தார்! இதுவே அடியேனுக்கு அனுபவமாயிற்று! எங்குரு ஜோதி இராமசாமிதேசிகர் அவர்களிடம் தீட்சை பெற்று சாதனை செய்து கண்மணி மாலையும் வெளியிட்டு சும்மா இருந்துவிட்டேன். எங்குரு ஜீவ சமாதி கொள்ளுமுன் கடைசியாக எம்மை அழைத்து தனக்குப்பின் குருவாக இருக்க பணித்தார்கள். நான் மறுத்தேன். நீண்ட நேரம் பேசி பல
காரணங்களும் கூறிய பின் குரு வற்புறுத்தவே அடியேன் குருவாக சம்மதித்தேன்! குருவும் சமாதி ஆகிவிட்டார்! நான் நமக்கு வேண்டாமடா சாமி இந்த குருபட்டம் என ஒதுங்கி விட்டேன்!
ஆனால் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வலிந்து
என்னை ஆட்கொண்டு எங்குரு சமாதி ஆகி 12 வருடங்கள் கழித்து என்னை
குரு பீடத்தில் அமர்த்திவிட்டார்?! கன்னியாகுமரியில் "சமரசசுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில்" ஞான சற்குருவாக இருந்து திருவடி உபதேசம் திருவடி தீட்சை வழங்க அருள்பாலித்தார்! "தங்க ஜோதி ஞான சபை" உருவாக்கி தங்கஜோதியான நம் உள்ஒளியை, பேரொளியான இறைவனை காண எல்லோருக்கும் அருட்குருவாக இருந்து ஞானம் வழங்க அடியேனை
பணித்துள்ளார்! வள்ளல் பணியை ஆக்ஞையை(ஆணை) சிரமேற்கொண்டு அடியேன் பணி புரிகிறேன்! இது வள்ளல் பெருமான் அருட்செயலே!
திருவருட் பாமாலை நாலஞ்சாறு - பக்கம் 132
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
ஞானம் அடைய வழி
கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சமே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் - நண்ணாய் கேள்
பார்க்க வேண்டும்தனையும் பத்தரை மாற்றுத்தங்கம்
ஆக்கப் போகாதோ உன்னால். பட்டினத்தார்
எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார் பாருங்கள்! பட்டினத்தார். ஞானம் அடைய நமக்கு வழி கூறுகிறார். கண்ணால்தான் சாதனை புரிந்து ஞானம் அடையவேண்டும். இதை நெஞ்சே நீ அறிவாயாக என்கிறார். ஆனால் நீ அதை விடுத்து மாயை வசப்பட்டு வேண்டாதெல்லாம் எண்ணுகிறாய் என கூறுகிறார். மேலும் கண் மூலம் சாதனை செய்து
தான் தன்னையும் உணரவேண்டும் என்றும் அதன் மூலம் உன் ஊன உடல் பத்தரை மாற்று பொன்னாக ஒளிர் விட்டு பிரகாசிக்கும் என்று கூறியுள்ளார்.
பக்கம் 107.
கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்.
www.vallalyaar.com
உயிர் எங்கே உள்ளது?
திருவடி என்பது எது?
உயிர் என்பது என்ன?
உயிர் எங்கே உள்ளது?
அதை பார்க்க தடை என்ன?
தடையை எப்படி தீர்ப்பது?
உயிரை எப்படி பார்ப்பது?
சத்தியஞான சபை என்பது என்ன?
எழு திரை விளக்குவது எப்படி ?
தவம் எப்படி செய்வது?
‘சும்மா இரு’ என்றால் என்ன ?
இந்த கேள்விகள் உள்ளதா உங்களிடம் ? இதை சொல்லி உணர்த்த ஒரு குரு தேவை, நமக்கு இருக்கும் அறிவால் இதை அறியமுடியாது.குருவிடம் உங்களை முழுதாக சரணாகதி அடைந்தால் (முழுமையாக ஒப்படைத்தால் ) மட்டுமே, குருவால் உங்களை மேல் நிலைக்கு அழைத்து செல்ல முடியும். குருவை சந்திந்து தீக்சை பெறுங்கள். கன்னியாகுமரி சென்று முக்கடலில் குளித்து கன்னியாகுமரி அம்மன் தரிசனம் பெற்று தீபமிட்டு, குரு காணிக்கை செலுத்தி உபதேசம் பெற்று, தீட்சை பெற்று, (சுக்கும சரீரம் - மறு பிறவி) துவிஜன் ஆகுங்கள்!
தவம் செய்யுங்கள். குரு - வள்ளலார் எப்பொழுதும் உங்களுக்கு துணை இருப்பார். .சைவ உணவு உண்டு மது, புகை ஒழுக்கம் இன்மை இல்லாதவர்கள் தீட்சை பெறலாம். ஒழுக்கமாக உள்ளவனுக்கே அருள் கிட்டும்.
சற்குரு சிவ செல்வராஜ்
எங்கள் குரு திரு.சிவ செல்வராஜ் அவர்களை பற்றி அவர் எழுதிய நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டது.குருவை பற்றி அவரே கூறுவது.
பணியுரை!
வந்தனம். நன்றி. நலமே நிலவுக.எல்லாம்வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால், சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் ஆசியால், அடியேன் திருச்சி ஞான சித்தர் ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் கருணையால்,1980ம் வருடம் விழி திறக்க பெற்றேன். வழி காட்டி ஆன்மிக பாதையில் நடை பயிலச் செய்தனர்.கண்ணியனானேன். கடைத்தேற வழி கிட்டியது.
குமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் எனும் ஊரில், அறிதுயில் கொண்ட அருகம்புல் சித்தர் நடராஜ சுவாமிகளை சமாதி வைக்கும் பெரும் பேறு அடியேனுக்கு கிட்டியது. 6 சென்று நிலம் காணிக்கையாக கொடுத்துபுண்ணியம்தேடி கொண்டேன். அருகம்புல் சித்தர் பெருமகனாரோடு பலகாலமாக பழகும் பாக்கியம் கிட்டியதால் ஞான நிலைகள் பல அறியும் பேறு கிட்டியது.
அடியேனுக்கு பீரப்பா பற்றி கூறி அருளியதும் அருகம்புல் சித்தரே. பாடினேன் அவர் மகிமையை. பார்த்துஅருளினார்.
அடியேனை அடியேனின் தீட்சா குருநாதர் ஞான சித்தர் ஜோதி ராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி ஆகும் சமயம் அடியனே அழைத்து குருவாக இருக்க பணித்தார்கள். குருவிற்கு சமாதி வைக்கும் பேறும் கிட்டியது. பெரும் பேறு பெற்றேன்.
குருவின் பரிபூரண அருள் பெற்றேன். ஆன்மிக அனுபவங்களை தந்து வள்ளல் பெருமான் அடியேனை மெருகேற்றினார்.
தேரூர் எனும் ஊரில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊரில், அருள்மிகு அழகிய மணவாள விநாயகர், அருள்மிகு ஹனுமான் கோயில் கொண்டுள்ள மடத்தில் ஆன்மிக பணிபுரிந்து வரும்குருமஹதேவ் அவர்களை சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்.ஒரு வருடம் அவர் அருளுரைகளை கேட்டு அறிவு பெற்றேன்.
அடியேன் சிரஞ்சீவி ஆஞ்சநேயர் அருள் பெற குரு மகாதேவ் அவர்களே காரணமானார். குரு மகாதேவ்அவர்களை சமாதி வைக்கும் பெரும் பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. பெரும் புண்ணியம்கிட்டியது.
1980 முதல் 1992 வரை 12 வருடம் தீவிர சாதனையின் பயனாக வள்ளல் பெருமானின் அருளால் “கண்மணி மாலை” எனும் கருத்தோவியம்ஆன்மிகபுரட்சி நூல் வெளியிட்டேன். வெளியிடவைத்தனர் சித்தர்கள் பலர். அருள் புரிந்தார் அம்மையப்பன். காலங்காலமாக பலரும் இரகசியம்என மறைத்த ஞானத்தை இந்நூல் பரசியமாக்கியது.
மரணமில்லா பெருவாழ்வு பெற்ற ஞானிகள் , சித்தர்கள் நம் நாட்டில் ஏராளம்.
ஒப்பற்ற இறைவனை உணர்ந்து ஒளி உடல் பெற்ற மகான்கள் ஏராளம். இந்தியாவின்
பெருமையே இதுதான்.எந்தன் வாழ்வில் அருள் கூட்டிய ஞானிகள் பலர். வழி
காட்டியோர் பலர். இன்னார் என்று அறிவிக்காமலேயே எனக்கு வழி காட்டிய தெய்வம்
சற்குரு
கோவிந்த சுவாமிகள். கன்னியாகுமரி பகவதி அம்மன் வாலை அருள் பெற சற்குரு
கோவிந்த சுவாமிகளின் அருளாசியே காரணம்.
கோவிந்த சுவாமிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலே காட்சி தந்து கருணை புரிந்து வழி காட்டியதால் அடியேன் இன்று குருஸ்தானத்தில் இருந்து வழி காட்ட முடிகிறது. வள்ளல் பெருமான் கூடவே இருந்து நடத்துகிறார். சூட்சம நிலையில் இருந்து ஆன்மிக ஞானத்தை உலக மக்களுக்கு உணர்த்தி வருவதே கோவிந்த சுவாமிகளின் ஒப்பற்ற பணி.இந்த ஒப்பற்ற ஒளி நிலை அடைந்த ஞானியை பாடி “சற்குரு கோவிந்தா சுவாமிகள்” என்றநூலை வெளியிட்டேன்.
திருச்செந்தூர் செந்திலாண்டவனும்,சுசீந்திரம் ஆஞ்சநேயரும் கன்னியாகுமரி பகவதியம்மனும் உயிர் காத்து உன்னத நிலை தந்து குருவாக்கி குவலயம் வணங்க வைத்தனர். பிறந்த பயனை பெற்றேன்.
உலகீன்ற அன்னை. எவ்வுயிருகும் தாய். எல்லா உயிரினுள்ளும் சக்தியாக ஒளிர்பவள். மகாமாயை. ஆதி சக்தி. அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி. சித்தர்கள் வணங்கும் வாலை குமரி.என்றும் கன்னி.உலகை காக்கும் தாய்.அடியேனுக்கு காட்சி கொடுத்து கன்னியாகுமரியில் அமர்த்தி,என்னைபக்குவபடுத்தி குருபீடத்தில் அமர்தியவள் இந்த வாலை.
வலிந்து எம்மை ஆட்கொண்டார் வள்ளல் இராமலிங்கர். அறிவிலா சிறு பருவத்தே எம்மை உடனிருந்துகாத்த ஒளியான ஞானி. இன்று அடியேனை பரிபூரணமாக ஆட்கொண்டு சற்குருவாக அமர்த்தி , ஞானஉபதேசம் திருவடி தீட்சை கொடுக்க அருள் புரிந்து வருகிறார் வள்ளல் பெருமான். நான் உரைக்கும்வார்த்தையெல்லாம் வள்ளல் பெருமான் எம் உள்ளத்திலிருந்து வெளிபடுத்துவதே. எம்மை, எம்குடும்பத்தை , எம் சீடர்களை காத்து அருள்வதும் மெய்ஞான சற்குரு வள்ளல் பெருமானே.
சற்குரு வள்ளல் பெருமானின் அருளால் இதுவரை 38 ஞான நூற்களை வெளியிட்டு
உள்ளேன்.ஆனைத்தும் மெய் ஞான இரகசியங்களை வெளிப்படையாக கூறுவது. இதில்
திருமந்திரம் , திருவாசகம்,திருவருட்பா, நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற
ஞானிகளின்பாடல்களுக்கான மெய்ஞான விளக்கங்கள்,ஞான மேதை தக்கலை பீர்முஹம்மது
ஒலியுள்ள அவர்களின் பாடல்களும், இயேசு கிறிஸ்துவின் பைபிளின்உரைகளும்
அடங்கும்.
அணைத்து ஞானிகள்கூறியுள்ள மெய்பொருள்ஒன்றே – “கண்களே” – என்றும், கண்கலே நம் உடலில் உள்ள இறைவனை காண நாம் உட்புகும் வாசல் என்பதை என் நூல்கள்மூலம் விளக்கி தெளிவுபடுத்தியுள்ளேன். காலம் காலமாக இரகசியம் என்று மறைத்து வைத்திருந்த இரகசியங்களை இநூல்கள் வெளியிடுகிறது.
இந்த ஞானத்தை உபதேசித்தும் , தீட்சை கொடுத்ததும் தங்க ஜோதி ஞான சபை கன்னியாகுமரியில்நடத்தியும் வருகிறேன். சீடர்கள் காணிக்கையால் வாழ்கிறேன். வள்ளல் பெருமான் வளமோடு வாழ்வாங்குவாழ வைக்கிறார்.
சைவ உணவு உட்கொள்பவர்கள் மட்டுமே ஞானம் கிட்டும். சைவ உணவே சன்மார்க்க உணவு. வாருங்கள். உங்களுக்கும் ஞானம் கிட்டும் எட்டும்.
மரணமில்லா பெரு வாழ்வு வாழ முதலில் உபதேசம். அடுத்து தவம் செய்யும் முறை உணர்த்தி திருவடி தீட்சை. மெய்பொருளை எல்லோரும் அறிந்து உணர்ந்துஎல்லோரும் இன்புற்று வாழ வழி காட்டுகிறார் வள்ளலார். அடியேன் ஒரு கருவியாகவே செயல்படுகிறேன்.
இப்பணி செய்ய வைத்த பரமனுக்கு நன்றி. பாமரன் அடியேனைபண்புள்ளவனாக மாற்றிய வாலை பொற்பாதமே சரணம். சரணம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
என்றும் உண்மையுள்ள
சிவ செல்வராஜ்
பணியுரை!
வந்தனம். நன்றி. நலமே நிலவுக.எல்லாம்வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால், சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் ஆசியால், அடியேன் திருச்சி ஞான சித்தர் ஜோதி இராமசாமி தேசிகர் அவர்கள் கருணையால்,1980ம் வருடம் விழி திறக்க பெற்றேன். வழி காட்டி ஆன்மிக பாதையில் நடை பயிலச் செய்தனர்.கண்ணியனானேன். கடைத்தேற வழி கிட்டியது.
குமரி மாவட்டம் தம்மத்துக்கோணம் எனும் ஊரில், அறிதுயில் கொண்ட அருகம்புல் சித்தர் நடராஜ சுவாமிகளை சமாதி வைக்கும் பெரும் பேறு அடியேனுக்கு கிட்டியது. 6 சென்று நிலம் காணிக்கையாக கொடுத்துபுண்ணியம்தேடி கொண்டேன். அருகம்புல் சித்தர் பெருமகனாரோடு பலகாலமாக பழகும் பாக்கியம் கிட்டியதால் ஞான நிலைகள் பல அறியும் பேறு கிட்டியது.
அடியேனுக்கு பீரப்பா பற்றி கூறி அருளியதும் அருகம்புல் சித்தரே. பாடினேன் அவர் மகிமையை. பார்த்துஅருளினார்.
அடியேனை அடியேனின் தீட்சா குருநாதர் ஞான சித்தர் ஜோதி ராமசாமி தேசிகர் அவர்கள் சமாதி ஆகும் சமயம் அடியனே அழைத்து குருவாக இருக்க பணித்தார்கள். குருவிற்கு சமாதி வைக்கும் பேறும் கிட்டியது. பெரும் பேறு பெற்றேன்.
குருவின் பரிபூரண அருள் பெற்றேன். ஆன்மிக அனுபவங்களை தந்து வள்ளல் பெருமான் அடியேனை மெருகேற்றினார்.
தேரூர் எனும் ஊரில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊரில், அருள்மிகு அழகிய மணவாள விநாயகர், அருள்மிகு ஹனுமான் கோயில் கொண்டுள்ள மடத்தில் ஆன்மிக பணிபுரிந்து வரும்குருமஹதேவ் அவர்களை சந்திக்கும் பாக்கியம் பெற்றேன்.ஒரு வருடம் அவர் அருளுரைகளை கேட்டு அறிவு பெற்றேன்.
அடியேன் சிரஞ்சீவி ஆஞ்சநேயர் அருள் பெற குரு மகாதேவ் அவர்களே காரணமானார். குரு மகாதேவ்அவர்களை சமாதி வைக்கும் பெரும் பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. பெரும் புண்ணியம்கிட்டியது.
1980 முதல் 1992 வரை 12 வருடம் தீவிர சாதனையின் பயனாக வள்ளல் பெருமானின் அருளால் “கண்மணி மாலை” எனும் கருத்தோவியம்ஆன்மிகபுரட்சி நூல் வெளியிட்டேன். வெளியிடவைத்தனர் சித்தர்கள் பலர். அருள் புரிந்தார் அம்மையப்பன். காலங்காலமாக பலரும் இரகசியம்என மறைத்த ஞானத்தை இந்நூல் பரசியமாக்கியது.
கோவிந்த சுவாமிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலே காட்சி தந்து கருணை புரிந்து வழி காட்டியதால் அடியேன் இன்று குருஸ்தானத்தில் இருந்து வழி காட்ட முடிகிறது. வள்ளல் பெருமான் கூடவே இருந்து நடத்துகிறார். சூட்சம நிலையில் இருந்து ஆன்மிக ஞானத்தை உலக மக்களுக்கு உணர்த்தி வருவதே கோவிந்த சுவாமிகளின் ஒப்பற்ற பணி.இந்த ஒப்பற்ற ஒளி நிலை அடைந்த ஞானியை பாடி “சற்குரு கோவிந்தா சுவாமிகள்” என்றநூலை வெளியிட்டேன்.
திருச்செந்தூர் செந்திலாண்டவனும்,சுசீந்திரம் ஆஞ்சநேயரும் கன்னியாகுமரி பகவதியம்மனும் உயிர் காத்து உன்னத நிலை தந்து குருவாக்கி குவலயம் வணங்க வைத்தனர். பிறந்த பயனை பெற்றேன்.
உலகீன்ற அன்னை. எவ்வுயிருகும் தாய். எல்லா உயிரினுள்ளும் சக்தியாக ஒளிர்பவள். மகாமாயை. ஆதி சக்தி. அண்டமெல்லாம் நிறைந்த அகிலாண்டேஸ்வரி. சித்தர்கள் வணங்கும் வாலை குமரி.என்றும் கன்னி.உலகை காக்கும் தாய்.அடியேனுக்கு காட்சி கொடுத்து கன்னியாகுமரியில் அமர்த்தி,என்னைபக்குவபடுத்தி குருபீடத்தில் அமர்தியவள் இந்த வாலை.
வலிந்து எம்மை ஆட்கொண்டார் வள்ளல் இராமலிங்கர். அறிவிலா சிறு பருவத்தே எம்மை உடனிருந்துகாத்த ஒளியான ஞானி. இன்று அடியேனை பரிபூரணமாக ஆட்கொண்டு சற்குருவாக அமர்த்தி , ஞானஉபதேசம் திருவடி தீட்சை கொடுக்க அருள் புரிந்து வருகிறார் வள்ளல் பெருமான். நான் உரைக்கும்வார்த்தையெல்லாம் வள்ளல் பெருமான் எம் உள்ளத்திலிருந்து வெளிபடுத்துவதே. எம்மை, எம்குடும்பத்தை , எம் சீடர்களை காத்து அருள்வதும் மெய்ஞான சற்குரு வள்ளல் பெருமானே.
அணைத்து ஞானிகள்கூறியுள்ள மெய்பொருள்ஒன்றே – “கண்களே” – என்றும், கண்கலே நம் உடலில் உள்ள இறைவனை காண நாம் உட்புகும் வாசல் என்பதை என் நூல்கள்மூலம் விளக்கி தெளிவுபடுத்தியுள்ளேன். காலம் காலமாக இரகசியம் என்று மறைத்து வைத்திருந்த இரகசியங்களை இநூல்கள் வெளியிடுகிறது.
இந்த ஞானத்தை உபதேசித்தும் , தீட்சை கொடுத்ததும் தங்க ஜோதி ஞான சபை கன்னியாகுமரியில்நடத்தியும் வருகிறேன். சீடர்கள் காணிக்கையால் வாழ்கிறேன். வள்ளல் பெருமான் வளமோடு வாழ்வாங்குவாழ வைக்கிறார்.
சைவ உணவு உட்கொள்பவர்கள் மட்டுமே ஞானம் கிட்டும். சைவ உணவே சன்மார்க்க உணவு. வாருங்கள். உங்களுக்கும் ஞானம் கிட்டும் எட்டும்.
மரணமில்லா பெரு வாழ்வு வாழ முதலில் உபதேசம். அடுத்து தவம் செய்யும் முறை உணர்த்தி திருவடி தீட்சை. மெய்பொருளை எல்லோரும் அறிந்து உணர்ந்துஎல்லோரும் இன்புற்று வாழ வழி காட்டுகிறார் வள்ளலார். அடியேன் ஒரு கருவியாகவே செயல்படுகிறேன்.
இப்பணி செய்ய வைத்த பரமனுக்கு நன்றி. பாமரன் அடியேனைபண்புள்ளவனாக மாற்றிய வாலை பொற்பாதமே சரணம். சரணம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
என்றும் உண்மையுள்ள
சிவ செல்வராஜ்
Subscribe to:
Comments (Atom)