Monday, 15 December 2014

உணர்ந்தால் கிட்டும் பேரின்பமே

குழந்தையாக கண்டால் வாலையை பணிந்தால் நம் துர் குணங்கள்
நீங்கி ஞானம் பெறலாம்! குழந்தை தாய்! தாயே குழந்தையாக,
கன்னியாகுமரியிலே வாலை! கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவாள்
குழந்தை தாய்!

குமரகுருபர் கூப்பிட ஓடோடி குழந்தையாக வந்து அருள் புரிந்தால்
மதுரையிலே வாலை மீனாட்சியாக!

மும்மூர்த்திகளுக்கும் குழந்தையாகவே காட்சி தந்து அருள் பாலித்தாள் காஞ்சியிலே
வாலை காமாட்சியாக!

திருசெந்தூரிலே பாலா - பாலசுப்பிமணியமாகவும்

குரு வாயுரிலே பாலா - பால கிருஷ்ணனாகவும் விளங்கும் வாலை
கன்னியாகுமரியிலே பாலா திரிபுர சுந்தரியாக பாலா பரமேஸ்வரியாக
பாலவாக ஆறு வயது குழந்தையாக நின்று அருள் பாலிக்கிறாள்!

கண்டவர் மனக்குளிர கண்ணிலே நின்றருளும் கன்னியாகுமரி பணிந்தால்
பார்த்தால் உணர்ந்தால் கிட்டும் பேரின்பமே - முக்தியே!

Sunday, 14 December 2014

ஆதி சக்தி - வாலை

கன்னியாகுமரிக்கு அழைத்து ஆட்கொண்டு அருளி, தங்க ஜோதி ஞான சபையும்  தந்து ஞான உபதேசம் ஞான தீட்சை நாடி வருபவருக்கு தர வைத்து காத்தும் தன் திருவடி தாமரை யில் வைத்து இருக்கிறாள் வாலை !


சித்தர்களுக்கெல்லாம் சித்தர் காக புசுண்டரால்  கன்னியாகுமரி பாடப்பட்ட
புண்ணிய ஸ்தலம்.

பரசுராமரால் பாடப்பட்டது - புராணம் கூறுகிறது 

அசுரர்களை அழிக்க உக்கிரமாகும் தாய் ஆதி சக்தி, ஞானிகளுக்கு அருள குழந்தையாக வருகிறாள்!  ஞானிகள் இயல்பில் குழந்தையாகி விடுவதால் தானோ, என்னவோ  அந்த ஆதி சக்தியும் குழந்தையாக வாலையாக பாலா திரிபுரசுந்தரியாக கன்னிகா பரமேஸ்வரியாக கன்னிகா காம ஷேத்திரம் என்று அழைக்கப்படும் கன்னியா குமரி ஊரில் கன்னியாகுமரி பகவதி அம்மனாக நின்றருள்கிறாள் !51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.

சித்தர்கள் போற்றும் வாலையென்பர். இந்த கன்னியாகுமரியையே! வாலையை வணங்காத சித்தன் இல்லை என்பது ஆன்றோர் மொழியே!

இன்றும் சித்தர்கள் எல்லாம் சூட்சுமமாக கன்னியாகுமரி யான வாலையை வந்து வணங்கி செல்வதாக ஐதீகம்.

ஆதி சங்கரர் சௌந்தர்ய லகரி பாடிப்பரவினார் வாலையை போற்றியே !

குமாரகுருபருக்கு குழந்தையாக வாலையாக காட்சி தந்து அருள்கிறாள் மதுரை மீனாட்சி! ஊர் மாறி பேர் மாறி நின்றாலும் எங்கும் விளங்கும் ஆதி சக்தியே அது என உணர்ந்தாலே உண்மை ஞானம் தெளியும்.

தாயிட் சிறந்த கோயிலுமில்லை - எதனால் இதை ஞானிகள் கூறியிருப்பார்! வாலை - ஆதி சக்தி கோயில் கொண்ட கோயிலே சிறந்த கோயிலாம்!  ஏன் இப்படி பொருள் கொள்ள கூடாது? எல்லாமே தாயின் கோயில் தான் காமாட்சியும் மீனாட்சியும் விசாலாட்சியும் அபிராமியும்
கன்னியாகுமரியும் காந்திமதியும்  கற்பகாம்பாளும் ஒன்று தான்!! கன்னியாகவே குமரியாகவே குழந்தையாகவே கோவில் கொண்டு இருக்கிறாள். கன்னியாகுமரியிலே!

அதுதான் சிறப்பு ! மற்றெங்கும் சிவமும் சக்தியுமாக தானே காட்சி! கன்னியாகுமரியிலோ சக்திமயம்! வாலை மட்டுமே ! ஆதி சக்தியே! அகில லோக அன்னை மட்டுமே!

கன்னியாகுமரியில் பால சௌந்தரி தியாக சௌந்தரி என இரு தோழியர்
சூழ வாலை மட்டுமே கோவில் கொண்டுள்ளாள்! இதுவே கன்னியகுமரியின்  சிறப்பு! தனிக்காட்டு ராணி !

Friday, 14 November 2014

கடவுளை அடைய கண்ணே வழி!

வேறு யாருமே, வேறு எந்த ஆசிரமுமே, வேறு எந்த சாமியாரோ
அடியேனை போலே ஞான இரகசியங்களை பரிபாசை
விளக்கங்களை வெளிப்படுத்த வில்லை?! நூல் வெளியிட்டது இல்லை?!
அடியேனுக்கு வள்ளலார் மற்றும் ஞானியர்கள் கொடுத்த ஊக்கம்!
ஆக்கம்! சிறந்த நோக்கம்!

ஞானிகள் எல்லோரும் நமக்கு துணை! கடவுளை அடைய கண்ணே வழி!
வேதங்கள் மதங்கள் மார்க்கங்கள் ஆசிரமங்கள் சங்கங்கள் எல்லோரும்
கூறும் ஒரே இறைவன் உன்னுள்ளே இருக்கிறான் உயிராக! காண,உணர
வழி விழியே! கண்ணே ! விழித்திரு காண்பாய்! ஞானம் பெற ஒரே விழிதான்
ஒரே வழி!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Tuesday, 16 September 2014

வள்ளல் பெருமான் உங்களுள் பிரவேசிக்க !!

வள்ளல் பெருமானே உலக மக்களை ஆட்கொள்ளும் கருணை வள்ளல்! "இப்போது யாம் இங்கிருக்கிறோம் இனி எல்லோர் உள்ளத்திலும் கலந்து கொள்வோம்" என மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் திருக்காப்பிட்டு கொள்ளுமுன்  கூறியருளினார்!

இதன் அர்த்தம் என்ன? யார் தீட்சை பெறுகிறாரோ ஞான
சற்குருவிடம் வருகிறாரோ, அவர் கண் வழி , தீட்சையின் மூலம் உள் பிரவேசிக்கிறார்! தீட்சை பெறுவர் அக்கணம் முதல் வள்ளலாரின் பிள்ளையாகிறார்! அக்கணமே
தீட்சை பெற்றவரின் மறுபிறப்பாகும்! அவனே துவிஜன் !  இரு பிறப்பாளன்! மறுபடியும் பிறந்தவனாகிறான்! அக்கணம் முதல் வள்ளலார் அந்த சீடரின் கூடவே துணையாக இருந்து காத்தருள்வார்! ஞானம் பெற வழி காட்டுவார்! கர்மங்களை தீர்த்து ஞானியாக்கியருள்வார்! வள்ளல் பெருமான் உங்களுள்
பிரவேசிக்க நீங்கள் இப்போது இருக்கும் ஒரு ஞான குருவை
சந்தித்து சரணடைக!

-ஞான சற்குரு சிவசெல்வராஜ்

Sunday, 14 September 2014

சும்மா இருக்கும் சுகம்

சும்மா இருக்கத்தான் ஒவ்வொருவரும் படாத பாடு படுகிறார்கள்!
மந்திரம் ஓதுகிறான்! யாகம் வளர்க்கிறான்! யோகம் செய்கிறான்!
இவையெல்லாம் அற்ப பலன்களையே தரும்! ஞான சாதனையான
சும்மா இருக்கும் கலையை சற்குரு மூலமாக திருவடி தீட்சை
பெற்று உணர்ந்து தவம் செய்பவனே இறைவனை அடைவான்!
பேரின்பம் பெறுவான்!

பீரப்பா நமக்குத்தரும் நல் உபதேசம் 'சும்மா இரு" என்பதே!

ஆறாயிரம் அருட்பாக்களை பாடிஅருளிய திருவருட் பிரகாச
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் முதல்  பாடல் என்ன தெரியுமா?

இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது
மற்றொண்டு வருமோ அறியேன் எங்கோவே
துன்றுமல வெம்மாயையற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்

சுகம் எது தெரியுமா? சும்மா இருப்பதே!
ஞானம் எது தெரியுமா? சும்மா இருப்பதே!
கடவுளை காணவேண்டுமா சும்மா இரு!

தாயுமான சாமிகள் இரவுபகலாக விடாது கண்ணின் மணியில்
ஒளியை-இறைவனை கண்டு தொழும் தவ சீலர்களே
நாம் கும்பிடும் கடவுள் என சாதனை செய்பவர்களையே மிக மிக உயர்வாக
கூறுகிறார். இந்த உண்மை ஞானத்தை பல கோடியில் ஒருவரே உணர்கிறார்.
அப்படிபட்டவரே நாம் கும்பிடும் கடவுள் என்றால் அது மிகை இல்லை.

பீரப்பா = மெய்பொருள்

ஏட்டி  லடங்காப் பொருளே யெனதிரு கண்மணியே!
எண்சாணுக்குள் நின்றருள் வா யெனதிரு கண்மணியே
என்றன் மனக்கண் திறந்தருள்வா என்றன் கண்மணியே

யாராலும் சொல்லி எழுதி உரைக்க முடியாத அளவு மகிமை பொருந்தியது "பொருளே " எனது இரு கண்மணியே என்கிறார் பீரப்பா!!


ஞான சற்குரு சிவசெல்வராஜ்